கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!
ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!
யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய கல்வி அமைச்சருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.
இந்நிலையில் யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் திமுக மாணவரணி சார்பில் இன்று(பிப். 6) போராட்டம் நடைபெறுகிறது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.