செய்திகள் :

INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்' -ரோஹித்தின் காரணமென்ன?

post image

இன்னும் இரண்டு வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கியது.

ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதைத்தொடர்ந்து, கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்த பிளெயிங் லெவனில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் முதல்முறையாக இடம்பெற்றனர். அதேசமயம், விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் போட்டியில் ஷமி களமிறங்கியிருக்கிறார்.

பிளெயிங் லெவன் அறிவித்த பிறகு பேசிய ரோஹித், ``முதலில் ஆக்ரோஷமாகப் பந்துவீசி பின்னர் நன்றாகச் செயல்பட வேண்டும். சிறுது நேரம் ஒய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது ஒரு புதிய தொடக்கம். சிறப்பாகச் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோலி

ஜெஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்று அறிமுகமாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கோலி விளையாடவில்லை. நேற்றிரவு அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது." என்று கூறினார்.

இந்தியா பிளெயிங் லெவன்: ரோஹித், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

IND vs ENG: 'பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா...' - ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இன்று ஆரம்பமான (பிப்ரவரி 6) முதல் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர... மேலும் பார்க்க

``Kohli -Slowly'' விராட்டை கடுப்பேற்றும் பேட் கம்மின்ஸ் - வீடியோ வைரல்!

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள... மேலும் பார்க்க

Rahul Dravid: சாலையில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த டிராவிட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், சாலையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராவிட் ... மேலும் பார்க்க

Champions Trophy: "ரோஹித் பின்வாங்கமாட்டார்; விராட் செய்ய வேண்டியது..." - அஸ்வின் கணிப்பு என்ன?

ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்க நெருங்க கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் ஜாம்பவான்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த சில போட்டிகளில் இருவரும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்ல... மேலும் பார்க்க

Abisheik Sharma: யுவராஜின் பயிற்சி முகாம்; லாராவின் ஃபோன் கால்- அபிஷேக் சர்மா சாதித்தது எப்படி?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா கலக்கியிருக்கிறார். 5 போட்டிகளிலும் சேர்த்து 279 ரன்களை எடுத்திருக்கிறார். 5 வது டி20 போட்டியில் அவர் ஆடியதெல்லாம் ருத்ரதாண்டவம். 54 பந்துகளில் 135 ரன... மேலும் பார்க்க

Himanshu Sangwan: `கோலி விக்கெட் எடுக்க ஐடியா கொடுத்த பஸ் டிரைவர்' - சுவாரஸ்யம் பகிர்ந்த ஹிமான்ஷு

ரஞ்சி டிராபியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலியை, வெறும் 6 ரன்களில் ஆஃப் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாக்கி ஒரேநாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹிமான்ஷு சங்வான். அந்தப்... மேலும் பார்க்க