Vidaamuyarchi: ``அஜித் சார் அருமையாக நடிச்சுருக்காரு, ஆனா..." - வெங்கட் பிரபு கூறியதென்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 6) ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
![விடாமுயற்சி](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/e9f8294e-4a76-48a8-a6c5-9fed522e5e52/652f38e1a6d5a.jpg)
அந்தவகையில் இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினரை வாழ்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " 'விடா முயற்சி' படம் அதன் பணிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சராசரி மனிதனாக அஜித் சார் நடித்திருப்பது அருமையாக உள்ளது.
#VidaaMuyarchi stays true to its genre a solid road film! #Ajith saar as a normal common man was so refreshing @trishtrashers ❤️❤️ But the semma surprise was @akarjunofficial saar & @ReginaCassandra !! Wishing #Mahizh saar @anirudhofficial@LycaProductions @dop_om… pic.twitter.com/OIv2reUvA9
— venkat prabhu (@vp_offl) February 6, 2025
ஆனால் படத்தில் செம்ம சர்ப்பரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும்தான். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள். சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்" என்று தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...