சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!
இணையத்தில் கசிந்த பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள்!
பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.
ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான திரைப்படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: காதலிக்க நேரமில்லை ஓடிடி தேதி!
இதன் படப்பிடிப்பு சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சைக்கிள் ஓட்டும் காட்சியும் ஸ்ரீலீலாவுடன் பேசும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி ஒழிக என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரும் காட்சிகளில் தெரிவதால் இப்படம் வெளியீட்டிற்கு முன்பே சர்ச்சைகளைச் சந்தித்தும் என்றே தெரிகிறது.