சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களுக்கான அட்டவணையை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓய்வை அறிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2015-16 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜியார்ஜியாவில் ஜூலை 3 ஆம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஜூலை 12 ஆம் தேதியும் தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகள் கிங்ஸ்டனிலும், அடுத்த மூன்று போட்டிகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: விராட் கோலி நீக்கமா? ரோஹித் சர்மா விளக்கம்!
தென்னாப்பிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு, ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.