செய்திகள் :

Parvathy: ``என் காதல் உடைந்து போனதற்கான காரணம் இதுதான்'' -நடிகை பார்வதி

post image
மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணி செய்து, 2006-ல் `Out of syllabus' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி.

2008-ல் அசர வைக்கும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி 'பூ' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் மரியான், உத்தம வில்லன் என கவனம் ஈர்த்தார். ‘என்னு நிண்டே மொய்தீன்’, 'சார்லி', 'பெங்களூர் டேய்ஸ்', 'உயரே', 'வைரஸ்', மற்றும் 'டேக் ஆஃப்' என வித்தியாசமான, சவால் நிறைந்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மதிப்பைப் பெற்றார். பெண் உரிமை, அரசியல், சமத்துவம் என மனதில் பட்டதைத் துணிச்சலுடன் பேசுபவர். தனது சொந்த வாழ்க்கைக் குறித்தும் மனம் திறந்து பேசுபவர்.

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும் பார்வதி, காதலில் தனக்கு இருக்கும் பிரச்னை குறித்தும் டேட்டிங் ஆப் பயன்படுத்துவது குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "டேட்டிங் ஆப்பில் அக்கவுன்ட் வைத்திருக்கிறேன். அவ்வப்போது அதில் நல்ல பசங்க இருக்காங்களா எனத் தேடிப் பார்ப்பேன். ஆனால், இதுபோன்ற டேட்டிங் ஆப்பில் காதல் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.

ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகி, தானாக நடக்கும் காதல்தான் எனக்குப் பிடிக்கும். என்னுடைய சினிமா துறையிலேயே நல்ல பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றும்.

நடிகை பார்வதி

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பையனைக் காதலித்தேன். காதலில் எனக்கு இருக்கும் பிரச்னை முன் கோபம்தான். சின்ன விஷயங்களுக்குக்கூட கடுங்கோபம் வரும். அதனால்தான் என் காதல் உடைந்து போனது. ரொம்ப நாளுக்குப் பிறகு அதே பையனைப் பார்த்துப் பேசி, இப்போ இரண்டுபேரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனி ஒரு காதலில் விழ வேண்டுமென்றால் அந்த முடிவைச்சரியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Ponman Review: 'கல்யாண வீட்டில் திக்... திக்... திக்...' - பேசில் ஜோசப்பின் 'பொன்மேன்' மின்னுகிறதா?

கொல்லத்தைச் சேர்ந்த ப்ரூனோ (ஆனந்த் மன்மதன்), தனது சகோதரி ஸ்டெஃபி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் தாயுடன் (சந்தியா ராஜேந்திரன்) வாழ்ந்து வருகிறார். தனது மகள் ஸ்டெஃபியின் திருமணத்திற்கு நகை சேர்ப்பதற்கு அரும்பா... மேலும் பார்க்க

L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்பன் டாக்

மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்க... மேலும் பார்க்க

Dominic and the Ladies' Purse Review: மெர்சல் மம்மூட்டி, மலையாளத்தில் கௌதம் மேனன்; கூட்டணி வென்றதா?

முன்னாள் காவல்துறை அதிகாரியான சி.ஐ. டோமினிக், தற்போது கொச்சியில் தனியார் டிடெக்ட்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அளித்த விளம்பரத்தைப் பார்த்து உதவியாளராகச் சேர வந்த விக்கி (கோகுல் சுரேஷ்) என... மேலும் பார்க்க

Basil Joseph : `மோஸ்ட் வான்டட் இளம் நடிகர்' - மாலிவுட்டை கலக்கும் பேசில் ஜோசப்!

இயக்குநராக களமிறங்கி நடிகராக உருவெடுத்து ஜொலித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அந்த லிஸ்ட்டில் தற்போது முக்கியமான இடத்தைப் பிடித்து அமர்ந்திருக்கிறார் மக்களின் ப்ரிய்த்திற்குரிய சேட்டன் பேசில் ஜோசப். சினி... மேலும் பார்க்க