செய்திகள் :

Basil Joseph : `மோஸ்ட் வான்டட் இளம் நடிகர்' - மாலிவுட்டை கலக்கும் பேசில் ஜோசப்!

post image
இயக்குநராக களமிறங்கி நடிகராக உருவெடுத்து ஜொலித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அந்த லிஸ்ட்டில் தற்போது முக்கியமான இடத்தைப் பிடித்து அமர்ந்திருக்கிறார் மக்களின் ப்ரிய்த்திற்குரிய சேட்டன் பேசில் ஜோசப்.

சினிமா மீதுள்ள ஆர்வத்தால் குறும்படங்களை தொடக்கத்தில் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, சில குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார். 2012- ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் பேசில் ஜோசப். பிறகு வேலையை விட்டுவிட்டு இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசனிடம் சினிமா பயில்வதற்கு உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தார். அதே ஆண்டு மற்றொரு படத்தில் உதவி இயக்குநராக பணிப்புரிந்து கொண்டிருக்கும்போதே ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

Basil Joseph

`இனி பேச்சுலாம் வேண்டாம். ஒன்லி வீச்சுதான்' என சட்டென முடிவெடுத்து 2015-ம் ஆண்டு தன்னுடைய முதல் படத்தை இயக்கினார் பேசில் ஜோசப். அதுதான் `குஞ்சிராமாயணம்' என்ற திரைப்படம். தன்னுடைய குருவான வினீத் ஶ்ரீனிவாசனை வைத்து அப்படத்தை எடுத்திருந்தார் பேசில்.

அவருடைய நண்பர்கள்தான் பேசில் ஜோசப்பை நடிப்பின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், பேசில் ஜோசப் திரைப்படங்களை இயக்குவதைவிட நடிப்பது சுலபம் என உணர்கிறவர். ஆனால், அவருடைய முழு விருப்பம் டைரக்‌ஷன்தான். தொடர்ந்து `ஹோம்லி மீல்ஸ்', `மாயநதி', `வைரஸ்' போன்ற படங்களில் நடித்தார். நடித்துக் கொண்டே டொவினோ தாமஸை வைத்து `கோதா' படத்தையும் இயக்கினார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்தவருக்கு பிரேக் கொடுத்தது `ஜோஜி' திரைப்படம்தான்.

Basil Joseph

திலிஷ் போத்தன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்குப் பிறகு பேசில் ஜோசப்புக்கு சவாலான கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து வர தொடங்கிவிட்டனவாம். இப்படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து `மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரம் இயக்கத்தில் உருவான `ஜான் இ மேன்' திரைப்படமும் நடிகராக இருவருடைய மைலேஜ்ஜை கூட்டியது. நகைச்சுவையை தன்னுடைய முகப்பாவனையில் வெளிப்படுத்துவது இவருடைய டிரேட் மார்க் என்றே சொல்லலாம்.

இப்படி நடிப்பில் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் மீண்டும் டொவினோ தாமஸை வைத்து `மின்னல் முரளி' படத்தை இயக்கினார். ஃபேன்டஸி படங்களின் இயக்குநர்களுக்கு எப்போதும் `மை டியர் குட்டிசாத்தான்' திரைப்படம்தான் அவர்களின் முதல் இன்பிரேஷனாக இருக்கும். இதில் பேசில் ஜோசப் மட்டும் விதிவிலக்கல்ல. அவருக்கும் `மின்னல் முரளி' போன்றதொரு ஃபேன்டஸி திரைப்படத்தை இயக்குவதற்கு இன்ஸ்பயர் செய்தது `மை டியர் குட்டி சாத்தான்' திரைப்படம்தானாம்.

2021-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உலகளவில் அப்படம் கவனம் ஈர்த்தது. கிராமப்புறத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோ, சூப்பர் பவரை வைத்து அவர் செய்யும் ஃபேன்டஸிகள் என ரசிக்கும் வகையிலான படத்தை எடுத்திருந்தார் பேசில் ஜோசப். இப்படத்திற்குப் பிறகு நடிப்பின் மீது முழுவதுமாய் வண்டியை திருப்பினார் பேசில் சேட்டன்.
Basil Joseph

அடுத்தடுத்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு தருணத்தில் ஜாக்பாட் அடித்தது. `பல்து ஜன்வர்', `ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கும் நடிப்பைக் கொடுத்து தன்னை ஆழமாக மாலிவுட்டில் நிரூபித்தார். கடந்தாண்டு மட்டும் `வர்ஷங்களுக்கு சேஷம்', `குருவாயூர் அம்பலநடையில்', `சூக்‌ஷமதர்ஷினி' என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

குருவாயூர் அம்பலநடையில் படத்தில் அத்தனை நகைச்சுவைகளை நிகழ்த்தி சிரிக்க வைத்தவர் அடுத்த திரைப்படத்திலேயே சிரிக்க வைத்துக் கொண்டே ஈவில் வில்லனாக பயம் காட்டினார். இதோ இந்த சேட்டனின் ஆட்டம் மீண்டும் இந்தாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான `பிராவின்கூடு ஷாப்பு' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக ரகளைகளை செய்து மனதில் பதிந்துவிட்டார்.

Basil Joseph

இப்போதிருக்கும் மாலிவுட்டின் ஹாட் ஃபேவரிட் இளம் நடிகர்களின் லிஸ்டில் பேசில் ஜோசப்புக்கு ஸ்பெஷல் இடம் கிடைத்திருக்கிறது. நகைச்சுவையுடன்கூடிய கதையின் நாயகன், நகைச்சுவையுடன்கூடிய வில்லன் கதாபாத்திரங்கள் என அடுக்கடுக்காக பேசில் ஜோசப்பை தேடுகிறார்கள் பல இயக்குநர்கள். இம்மாதம் 30-ம் தேதி இந்த இளம் நடிகர் நடித்துள்ள `பொன்மேன்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கூடிய விரைவில் பேசில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் இயக்கவிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியதுவத்தைக் கொடுத்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கும் அளவிற்கு பெரிய நடிகராக வளர்ந்திருக்கும் பேசில் ஜோசப்தான் தற்போதைய மாலிவுட்டின் `மோஸ்ட் வான்டட் இளம் நடிகர்!'

பால்கனியில் நிர்வாணமாக வம்பு செய்த நடிகர் விநாயகன்; சர்ச்சையாகும் வைரல் வீடியோ

கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தமிழ் சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார். நடிகர் விநாயகன் அவ்... மேலும் பார்க்க

Malayalam Movies: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய படங்கள்

ஆண்டின் தொடக்கத்திலேயே மலையாளப் படங்கள் திரையரங்குகளில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி ஆண்டின் தொடக்கத்திலேயே மாலிவுட் படைப்புகள் அடுத்தடுத்து ஹிட் அடித்துக் கொண்டிருக... மேலும் பார்க்க

Pravinkoodu Shappu Review: கள்ளுக்கடையில் நடந்த கொலை; சிரிக்க வைக்கிறதா இந்த டார்க் காமெடி?

டார்க் காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `ப்ராவின்கூடு ஷாப்பு (புறாக்கூண்டு கள்ளுக்கடை)'ப்ராவின்கூடு கள்ளுக்கடையின் உரிமையாளரான பாபு (சிவாஜித்) ஊரில் பலரிடம் வம்... மேலும் பார்க்க

Rekhachithram Review: சுவாரஸ்யமான ஒன்லைன்; மம்மூட்டி AI கேமியோ; மீண்டும் மிரட்டுகிறாரா ஆசிஃப் அலி?

சூதாட்டத்திற்கு அடிமையாகி தன்னுடைய பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார் காவல் அதிகாரி விவேக் (ஆசிஃப் அலி). இந்த சஸ்பென்ஷன் அவருடைய நற்பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால் பல அவமானங்கள... மேலும் பார்க்க

Toxic: KGF புகழ் யஷ்-ஐ இயக்கும் மலையாள நடிகை - கூகுளில் அதிகம் தேடப்படும் இவர் யார்?

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யஷ். கே.ஜி.எஃப் மூலம் இந்திய ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இவருக்கு, நேற்று பிறந்தநாள். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படத்தின் டீசர் வெளியானது.அந்த டீ... மேலும் பார்க்க