செய்திகள் :

Sehwag : முடிவுக்கு வருகிறதா 20 ஆண்டுக்கால திருமண உறவு? - சேவாக் - ஆர்த்தி தம்பதி பிரிகின்றனரா?!

post image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்- ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சேவாக் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சேவாக் - ஆர்த்தி இருவரும் 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகவும், இதனால் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சேவாக்- ஆர்த்தி
சேவாக்- ஆர்த்தி

சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் unfollow செய்துகொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக சேவாக் பகிர்ந்த குடும்ப போட்டோவில் ஆர்த்தி இல்லை. இந்நிலையில் விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சேவாக்- ஆர்த்தி
சேவாக்- ஆர்த்தி

சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sanju Samson : ``என் மகனைத் தனிமைப்படுத்துகிறார்கள்!" - சஞ்சு சாம்சன் தந்தை வேதனை

சமீப காலமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் எந்தவொரு தொடராக இருந்தாலும், அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் கூடியிருக்கிறது. அதற்கேற்றவாறு ஐ.ப... மேலும் பார்க்க

Champions Trophy 2025: இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறும் - வதந்திகளுக்கு BCCI பதில்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர், முத்திரைகள் இடம்பெறாது எனத் தகவல்கள் வெளியான கிளம்பிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பாகிஸ்தான் முத்திரை இடம்பெற... மேலும் பார்க்க

Ranji Trophy : களமிறங்கும் ரோஹித், கோலி; களைகட்டும் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் - முழு விவரம்

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது.ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்கள் ரஞ்சியில் களமிறங்க இருப்பதால், இந்தப் போட்டிகளின... மேலும் பார்க்க

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? - அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் - சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் - ... மேலும் பார்க்க

`நான் நன்றாக விளையாடவில்லை; அதனால்தான்...'- இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறத... மேலும் பார்க்க