செய்திகள் :

'நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை... அந்த போட்டோவில் இருப்பதும் நான் இல்லை' - சீமான் சொல்வதென்ன?

post image

இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம்.

சீமான்

பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளனர். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை‌ எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை.

`யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'

நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்துக்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்கள் பதில் சொல்வார்கள். ஒருவர் நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என்கிறார். மற்றொருவர் 8 நிமிடம் தான் சந்தித்தேன் என்று கூறுகிறார்.‌

சீமான் - கேப்டன் பிரபாகரன்

ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நானே சொல்கிறேன் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. இப்போது எதை நம்புவீர்கள். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்த  போட்டோவில் இருப்பது நானே இல்லை என்கிறேன். வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள். ஈரோடு தேர்தலில் நல்ல ஆண்மகனாக இருந்தால் சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்ல வேண்டும். பெரியார் திராவிடத்தின் குறியீடு, பிரபாகரன் தமிழின் அடையாளம். பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு

பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்றாவது சக்தியாக வந்துள்ளேன்.சூரியன் உதித்தால் தான் விடிவு வரும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு வரும்.” என்றார்.

TVK : 'அறுசுவை விருந்து... நியமன ஆணை... வெள்ளிக்காசு!' - விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ்

தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக முக்கிய மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மீட்டிங்கில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு அறுசுவை விர... மேலும் பார்க்க

'இது கட்சியா... ரியல் எஸ்டேட் கம்பெனியா...' - உள்கட்சி தேர்தலால் கொதிக்கும் கோவை பாஜக

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக, கோவையில் பா.ஜ.க சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி பா.ஜ.க வேட்பாளராக ந... மேலும் பார்க்க

Israel - Gaza: 'போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்பும் தொடரும் தாக்குதல்!' - காரணம் என்ன?!

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் கடந்த வாரம் முற்று பெறுவதுப்போல சென்று மீண்டும் தொடங்குவது போல ஆகியுள்ளது.கிட்டத்தட்ட 15 மாதங்கள் நடந்த இந்தப் போரில் இருதரப்பிலும் நூற்... மேலும் பார்க்க

``பிரபாகரனை சந்தித்தது உண்மையாக இருக்கலாம்; ஆனால் போட்டோ போலியானது" -திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி

சமீப நாள்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து ... மேலும் பார்க்க

``பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்; சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுக்கிறார்'' -திருமாவளவன்

சமீப நாள்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து ... மேலும் பார்க்க