ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!
18 பேர் கொண்ட இலங்கை அணியை தனஞ்ஜெயா டி சில்வா கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விவரம்
தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓஷதா ஃபெர்னாண்டோ, லகிரு உடாரா, சதீரா சமரவிக்கிரம, சோனல் தினுஷா, பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வாண்டர்சே, நிஷான் பெய்ரிஸ், மிலன் ரத்நாயகே, அஷிதா ஃபெர்னாண்டோ, விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா.