2-வது டி20: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணியில் ஒரு மாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஜனவரி 25) நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.
இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக பிரைடான் கார்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இரண்டாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்
பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கோப் பெத்தேல், ஜேமி ஓவர்டான், பிரைடான் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 2 ஓவர்களை வீசிய இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 38 ரன்களை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.