ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த மகளிரணி; ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
கடந்த ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியை ஐசிசி இன்று (ஜனவரி 24) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்த அணியில், இந்திய வீராங்கனைகள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். அவருடன் மற்றொரு இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த மகளிரணி விவரம்
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வர்ட் (கேப்டன்), சமாரி அத்தப்பட்டு, ஹேலி மேத்யூஸ், மாரிஸேன் காப், ஆஷ்லே கார்டனர், அன்னாபெல் சதர்லேண்ட், எமி ஜோன்ஸ், தீப்தி சர்மா, சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் கேட் கிராஸ்.