இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
கேப்டனாக அல்ல, தலைவனாக இருக்க விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்
இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அல்லாமல், அணியின் தலைவனாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
கடந்த டி20 உலகக் கோப்பையுடன் ரோஷித் சர்மா, கோலி ஓய்வு அறிவித்ததால் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
2ஆவது டி20 சென்னையில் நாளை (ஜன.25) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் பேசியதாவது:
தலைவனாக இருக்க விரும்புகிறேன்
நான் வெறுமனே கேப்டனாக மட்டுமில்லாமல், தலைவனாக இருக்க விரும்புகிறேன். அணியாக நாங்கள் ஒன்றினை செய்து முடிக்க வேண்டுமானால் அனைவரும் ஒரே மாதிரியாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
சில அடிப்படை விஷயங்கள், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல பழக்கங்களைப் பின் தொடர வேண்டுமென இதுபோல சிறிய விஷயங்கள் மட்டுமே நான் கூறினேன்.
களத்தினுள் இறங்கிய பிறகு, உங்களது உடலை விட்டு போட்டியை மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.
கேப்டானாக அறிவிக்கப்பட்டபோது...
கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் நான் எனது குடும்பத்தை அழைத்து பேசினேன். அது உணர்ச்சிபூர்வமான கணமாக இருந்தது. பின்னர், நீண்ட பெருமூச்சி விட்டேன், அந்தக் கணத்தைக் கொண்டாடினேன்.
வீட்டில் உட்கார்ந்து எனது மனைவியுடன் சமைத்து சாப்பிட்டேன். அந்த மாலைப் பொழுது சிறப்பான ஒன்றாக அமைந்தது என்றார்.