திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!
பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார். 3 சிறுமிகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். மேலும், இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ரூடாகுபானாவுக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுடையவருக்கு இவ்வாறான தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை என்று நீதிபதி கூறினார்.
இதையும் படிக்க:அமெரிக்காவில் 538 பேர் கைது!
மேலும், வருங்காலத்தில் அவர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார் என்று நம்பிக்கை பிறக்கும்பட்சத்தில், முன்கூட்டியே அவர் விடுவிக்கப்படுவார் என்றும் தீர்ப்பில் கூறினார். இருப்பினும், 52 சிறை தண்டனை தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதுதவிர, இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னரே, பொது இடங்களில் ஆயுதங்களைக் கையாண்ட காரணத்தால் ரூடாகுபானாவையும், அவரது தாயாரையும் காவல்துறையினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.