செய்திகள் :

உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?

post image

உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது 2022 ஆம் ஆண்டில் ரஷியா போர் தொடுத்ததால், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் உள்பட நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷியாவின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும், சில நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்பதன் மூலம் வருவாய் ஈட்டி, அதனை போர் நிதிக்காக ரஷியா செலவு செய்து வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா, சீனாவும் அடங்கும்.

இந்த நிலையில், உலகளவில் அதிகப்படியான கச்சா எண்ணெயை விற்பனை செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்-கிடம் (OPEC), கச்சா எண்ணெயின் விலையைக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:அமேசானில் 1,700 பேர் பணிநீக்கம்! ஏன்?

உலகளவில் 38 சதவிகித கச்சா எண்ணெயை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த நாடுகளிடம்தான் 79.5 சதவிகித கச்சா எண்ணெய் வளமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில், நிலையானதாக இல்லாமல் ஆண்டுதோறும் நாடுகள் மாறுபடும்.

2024 ஆம் ஆண்டின்படி, தற்போது குவைத், சௌதி அரேபியா, காங்கோ, ஐக்கிய அமீரகம், ஈரான், ஈராக், கயானா, லிபியா, வெனிசுலா, காபன், அல்ஜீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் கச்சா எண்ணெயின் விலையைக் குறைத்தால், ரஷியா எண்ணெய் விற்பனை பாதிக்கும். இதனால், ரஷியாவின் போருக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரைத் தடுக்க உலகளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்ப்பும், தான் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அதிபர் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனவரி 20 ஆம் தேதியில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 538 பேர் கைது!

அமெரிக்காவில் ஐநூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ வி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் தீயில் வீட்டை இழந்த ரியாலிட்டி டிவி தம்பதி!

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய காட... மேலும் பார்க்க

அமேசானில் 1,700 பேர் பணிநீக்கம்! ஏன்?

கனடாவில் 1,700 பேர் பணிநீக்கம் செய்யப்படவிருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.கனடாவில் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதாக அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனட... மேலும் பார்க்க

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெ... மேலும் பார்க்க

செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை! மின் உற்பத்தி சாத்தியமா?

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.சீனா பல்வேறு துற... மேலும் பார்க்க