அமெரிக்காவில் 538 பேர் கைது!
அமெரிக்காவில் ஐநூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை நாடு கடத்தியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது; பயங்கரவாத அமைப்பினர், பாலியல் குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியது, ``வரலாற்றில் மிகப்பெரிய பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை நடக்கும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:லாஸ் ஏஞ்சலீஸ் தீயில் வீட்டை இழந்த பிரபல தம்பதியர்!