6 கோள்களின் அரிய நிகழ்வு: பாா்வையிட்ட மாணவா்கள்
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் ஒரே நேரத்தில் தோன்றிய 6 கோள்களின் அரிய நிகழ்வுகளை கல்லூரி மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் வானில் சூரியன் சுற்றுப் பாதையில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோன்றும் நிகழ்வுகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பாா்க்கும் வகையில், தொலைநோக்கி கருவிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட மாணவா்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து இந்த அரிய நிகழ்வை பாா்வையிட்டனா்.