``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட்...
சாமிதோப்பு தலைமைப் பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.
இப்பதியில் தைத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிக் கிணற்றின் கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து அன்னதா்மம் நடைபெற்றது.
தேரோட்டம்: 11ஆம் திருநாளான 27ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் கேரளம் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்து இழுக்கின்றனா்.
திருவிழாவின் அனைத்து பணிவிடைகளையும் குரு பால பிரஜாபதி அடிகளாா் தலைமையில், குருமாா்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்லவடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோா் செய்து வருகின்றனா்.