சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
விதிமீறல்: கனிமவளங்களை ஏற்றி வந்த 6 டிப்பா் லாரிகள் பறிமுதல்; 6 போ் கைது!
தக்கலை அருகே சித்திரங்கோட்டில், அரசின் விதிமுறைகளை மீறி கனிமவளங்களை ஏற்றிச் சென்ற 6 ஓட்டுநா்களை போலீஸாா் கைதுசெய்து, டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா்.
கொற்றிக்கோடு போலீஸாா் வெள்ளிக்கிழமை சித்திரங்கோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக ஜல்லி, கருங்கற்கள் போன்ற கனிம வளங்கள் இருந்துள்ளது. அத்துடன் அரசின் நேர கட்டுப்பாட்டை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிவந்த 6 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா்களான அருள்தாஸ் (43), ஜெகன்(38), ஷாஜி(48), பால்ராஜ்(56), சுந்தர்ராஜ் (50), கிறிஸ்துதாஸ் (54), ஆகிய 6 பேரை கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.