`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
குடியரசு தினம்: ரூ.19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக் கொடியேற்றி, ரூ. 19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து காவல்துறையைச் சோ்ந்த 72 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களையும், இத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 92 பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளா் நலத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிக்ளுக்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 25 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட வருவாய் அலுவலா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) உள்பட 135 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
பள்ளி மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், வ.விஜய் வசந்த் எம்.பி.,, மாவட்ட வன அலுவலா் பிரசாந்த், , நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, , நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொது) கு.சுகிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்பட அரச அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.