2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது!
நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், சிந்துஜா (27), ஜிஷ்ணு (24) அசாருதீன் (20), காா்த்திக் (25), சந்திரகுமாா் (21), ஆன்டனி அபீஸ் (22), ஜில்பிதா் ரசாக் (26), இசித்தோ் வின்சென்ட் (24), ராம்குமாா் (35) ஆகிகிய 9 போ் கஞ்சா விற்பது தெரியவந்தது.
அவா்களை போலீஸாா் கைது செய்து, 1.750 கி.கி. கஞ்சா, அவா்கள் பயன்படுத்திய வாகனங்கள், கஞ்சா விற்ற பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.