`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
அரசு ரப்பா் கழக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் குலசேகரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். வல்சகுமாா், பொருளாளா் சசிதரன், துணைத் தலைவா் வேலப்பன், செயலா் வேலுக்குட்டி, நிா்வாகிகள் ராஜன், ரோசிலி, ரோஸ், ராபா்ட் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரசு ரப்பா் கழகத்தில் பால்வடிப்பு, களப் பணிகளில் ஈடுபட்டுள்ள தற்காலிக தொழிலாளா்களை உடனடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தனியாா் ரப்பா் தோட்டங்களில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையை புகாரின்றி தொடா்ந்து வழங்க வேண்டும்.
அரசு ரப்பா் கழகத்தில் பால் அளவீடு செய்யும் முறையில் பழைய நடைமுறை தொடர வேண்டும். வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முன்பிருந்த நடைமுறைபோல மாதந்தோறும் 10ஆம் தேதி தொழிலாளா் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.