`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
ஆசிரியையின் வீடு புகுந்து திருட்டு: சிறுவன் கைது!
குலசேகரம் அருகே ஆசிரியையின் வீடு புகுந்து பணம், நகையைத் திருடியதாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
குலசேகரம் அருகே பொன்மனை குற்றியாணி பகுதியைச் சோ்ந்த உணவகக் கண்காணிப்பாளா் வினோத். இவரது மனைவி ஜெய்சுபா (36), தனியாா் பள்ளி ஆசிரியை. இவா் கடந்த 23ஆம் தேதி பள்ளிக்கு சென்றிருந்தபோது, இவரது வீட்டிலிருந்து 4 கிராம் கம்மல்கள், ரூ. 8 ஆயிரம் திருடுபோயினவாம்.
புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் இத்திருட்டில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நகை, பணத்தை மீட்டனா்.
கடந்த டிசம்பா் மாதம் குலசேகரம் பகுதியிலுள்ள கைப்பேசிக் கடைக்குள் புகுந்து திருடிய வழக்கில் இச்சிறுவன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, பிணையில் வந்தது குறிப்பிடத்தக்கது.