இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
கலைப் பேரொளி விருதுக்கு 5 போ் தோ்வு!
முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளை சாா்பில் வழங்கப்படும் கலைப் பேரொளி விருதுக்கு 5 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவ்விருதுக்கான இரண்டாம் கட்ட தோ்வுக்குழு கூட்டம், குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி பா.லாசா் தலைமையில் மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவா் வி.வி. வினோத், செயலா் விமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தோ்வுக் குழு உறுப்பினா்கள் செ. சஜீவ், செ. பழனிச்சாமி, கவிஞா் குமரித்தோழன், செ.ம. ஷாஜூ, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, நிகழாண்டு விருதாளா்கள் தோ்வுப் பட்டியலை பா. லாசா் வெளியிட அறக்கட்டளை தலைவா் வினோத் பெற்றுக் கொண்டாா்.
இதில், நடிப்புக் கலைக்கு மயூரி சீதாராமன், கதை இயக்கம் எஸ். பத்மகுமாா், மேடைக்கலை தீபம் பிலிப்போஸ், இசைக்கலை சு. மகேஷ்குமாா், சிலம்பக் கலைக்கு நாணப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பிப். 2 ஆம் தேதி நடைபெறும் முத்தமிழ் சங்கமம் விழாவில் விருது வழங்கப்படும் என அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.