நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட மூவர் கைது; சிக்கியது எப்படி?
வடசென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தன்னுடைய 12 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவள், தன்னுடைய தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறினாள். நீண்ட நேரமாகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. அவளின் தோழி வீட்டில் விசாரித்தபோது அங்கு என் மகள் செல்லவில்லை எனத் தெரிந்தது. மேலும், அந்த தோழியையும் காணவில்லை. என்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். சிறுமி மாயம் என போலீஸார் விசாரித்த நிலையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து திரு.வி.க நகர், செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிறுமி, அவளின் தோழியைக் காணவில்லை எனத் தெரிந்ததும் அவர்கள் தொடர்புடைய நபர்களிடம் விசாரணையைத் தொடங்கினோம். அப்போது திரு.வி.க. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நூலகத்தின் மாடியில் காணாமல் போன சிறுமிகள் இருக்கும் தகவல் கிடைத்தது. அங்குச் சென்றபோது சிறுமிகளுடன் அவர்களின் ஆண் நண்பர்கள் இருந்தனர். அங்குக் கண்ட காட்சி எங்களையே நிலைகுலைய வைத்தது. நூலகத்தின் மாடியில் தனிமையில் மூன்று சிறுமிகளும் சிறுவன் உள்பட மூன்று பேரும் இருந்தனர். உடனடியாக அவர்களை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம்.
காணாமல் போன சிறுமி, அவளின் தோழிகள் இருவர் என மூன்று பேரையும் அவர்களின் ஆண் நண்பர்கள் நூலகத்தின் மொட்டை மாடியின் இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். மகளைக் காணவில்லை என ஒரு சிறுமியின் அம்மா எங்களுக்குப் புகாரளித்ததும் உடனடியாக அவரைத் தேடியபோதுதான் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது.
தற்போது சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் அலி (21), அபிஷேக் (19), சிறுவன் உள்பட மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். மூன்று சிறுமிகளையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அலி, அபிஷேக் ஆகியோரை புழல் சிறையிலும் சிறுவனைச் சிறார் சீர்த்திருத்தப்பள்ளியிலும் சேர்த்துள்ளோம். அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இன்னும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
சிறுமி மாயம் என்றதும் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தோம். விசாரணையில் பாலியல் தொல்லை நடந்தது தெரியவந்ததால் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறுமிகளுக்கும் கவுன்சலிங் அளிக்கப்பட்டதோடு அவர்களைக் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம். சிறுமிகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போக்சோ வழக்கு என்பதால் வழக்கின் முழு விவரங்களை வெளியில் சொல்ல முடியாது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs