செய்திகள் :

மதுரையில் கொலை; தூத்துக்குடி தேரிக்காட்டில் உடல் புதைப்பு... ஊரடங்கில் நடந்த பகீர் சம்பவம்..!

post image

மதுரை மாவட்டம், வண்டியூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், மதுரையில் வேல் அறக்கட்டளை என்ற பெயரில் மது போதை ஒழிப்பு மையம் நடத்தி வந்தார். இங்கு மதுரை, கே.புதூரைச் சேர்ந்த துளசிராமன் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு துளசி ராமன் தனியாக மதுபோதை ஒழிப்பு மையம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார்.  இதனால் ரவீந்திரனுக்கும் துளசிராமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ரவீந்திரன் துளசிராமனை தாக்க முயன்றுள்ளார். அப்போது துளசிராமனின் மகன் சிந்துராஜ் மதுபோதை ஒழிப்பு மையத்திற்கு சென்று ரவீந்திரன் மற்றும் ஊழியர்கள் சிலரை தாக்கிவிட்டு தன் தந்தையை அழைத்து வந்துவிட்டாராம்.

கொலை செய்யப்பட்ட சிந்துராஜ்

இந்த நிலையில், சிந்துராஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு மதுவுக்கு அடிமையானார். அவரது மனைவி பானுப்பிரியா, வேல் அறக்கட்டளையின் போதை மது ஒழிப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது கணவரை போதையில் இருந்து மீட்க வேண்டுமென கூறியுள்ளார். அங்கிருந்த பணியாளர்கள், சிந்துராஜை மையத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.  அப்போது மதுபோதையில் மயங்கி கிடந்த சிந்துராஜைப் பார்த்த பணியாளர்கள் ரவீந்திரன், பால்பாண்டி, வசந்த் ஆகியோர் தங்களை மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிந்துராஜ் மூன்று பணியாளர்களையும் தாக்கியுள்ளார். இதில்  ஆத்திரமடைந்த பணியாளர்கள், சிந்துராஜை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அதன் பிறகு போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் ரவீந்திரனுடன் பானுப்பிரியாவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்துராஜின் தந்தை துளசிராமன், போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்து மகன் குறித்து கேட்டுள்ளார்.

சேகரிக்கப்பட்ட சிந்துராஜின் உடல் எலும்புகள்

சரியான பதில் கூறாததால் சந்தேகமடைந்த துளசிராமன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணை திருப்தி அடையாததால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2023-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து போதை ஒழிப்பு மையத்தினர் மற்றும் சிந்துராஜின் மனைவி பானுப்பிரியா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிந்துராஜை அவரது மனைவி பானுப்பிரியா, போதை ஒழிப்பு மையத்தின் உரிமையாளர் ரவீந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் சிந்துராஜை கொடூரமாகத் தாக்கியதும் அதில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. பின்னர், சிந்துராஜின் உடலை மரம் அறுக்கும் மிஷின் மூலம் துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டு காரில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள், ரவீந்திரனின் நண்பரான திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த கண்ணன் என்ற பிச்சைக் கண்ணன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து ரவீந்திரன், கண்ணன், பால்பாண்டி, வசந்த் ஆகியோர் குதிரைமொழி தேரிப்பகுதியில் குழி தோண்டி புதைத்துவிட்டு வழக்கம்போல் தங்களின் பணிகளில் ஈடுபட்டனர்.

கண்ணன், ரவீந்திரன் ஆகியோர்  மீது மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளதும்  தெரிய வந்தது. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் திருச்செந்தூருக்கு அழைத்து வந்தனர். திருச்செந்தூர் அருகிலுள்ள குதிரைமொழி தேரிப்பகுதியில் சிந்துராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

கைது செய்யப்பட்ட கண்ணன் - ரவீந்திரன்

ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டதில் எலும்புகள், மண்டை ஓடு என உடல் பாகங்கள் தனித்தனியாக கிடைத்தன. இதனை சேகரித்த போலீஸார் மதுரை மற்றும் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.  ”கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்த போது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்போது போலீஸாரின் கடுமையான பாதுகாப்பினையும் மீறி உடலை எப்படி திருச்செந்தூருக்கு கொண்டு வந்தனர் என்பது மர்மமாக உள்ளது. கொலை நடந்தது மதுரையில். ஆனால் உடலை ஏன் திருச்செந்தூர் பகுதிக்கு கொண்டு வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர் போலீஸார்.

தஞ்சை: 916 முத்திரை, போலி நகை - அடகு வைத்து மோசடி செய்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெட்டிபாளையம் சாலையில் உள்ள காந்திரபும் பகுதியை சேர்ந்த திவ்யா(31), செக்கடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி(38) ஆ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்களை காரில் விரட்டிய கும்பல்... பேசுபொருளான சம்பவம் குறித்து போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் மு... மேலும் பார்க்க

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் - சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, க... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் வழக்கு; `குற்றம் நிரூபிக்கப்படவில்லை'- மரண தண்டனை கைதியை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

மும்பையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி 23 வயது எஸ்தர் என்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஐதராபாத்திற்கு விடுமுறையில் சென்றுவிட்டு மும்பைக்கு ரயிலில் வந்தார். அவர் மும்பையில் டி.சி.எஸ் நிறுவனத்தில்... மேலும் பார்க்க

வனவிலங்கு வேட்டையில் இளைஞர் சுட்டுக் கொலை... யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகம்.. 13 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை 3- ம் டிவிஷன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜம்ஷித் என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை விசாரித்த வனத்துறையினர், ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இளம்பெண்ணிடம் நெருங்கிப் பழகிவிட்டு, திருமணத்துக்கு மறுப்பு - வங்கி ஊழியர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தன்ராஜ் (30) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே வ... மேலும் பார்க்க