செய்திகள் :

Karnataka: `அவளுக்குத் தேவை என் மரணம் மட்டும்தான்...' - மனைவியைக் குற்றம்சாட்டி இளைஞர் தற்கொலை

post image

கர்நாடக மாநிலம், சாமுண்டேஸ்வரி நகர்ப் பகுதியில் வசித்தவர் பீட்டர் கொல்லப்பள்ளி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்றப் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், திருமணம் முடிந்ததிலிருந்து கணவன் - மனைவிக்குள் தொடர் சண்டைகள் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பீட்டர் கொல்லப்பள்ளி நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பீட்டர் வீட்டில் சோதனை நடத்தியது.

தற்கொலை செய்துகொண்ட பீட்டர்

அதில், தற்கொலைக் குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில், ``அப்பா மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னைக் கொடுமைபடுத்துகிறாள். அவளுக்குத் தேவை என் மரணம் மட்டும்தான். அவளின் சித்ரவதையால் தினந்தினம் இறந்துகொண்டிருக்கிறேன். அண்ணா தயவு செய்து நம் பெற்றோரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீட்டரின் சகோதரர் எஷய்யா, ``ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாங்கள் எல்லோரும் தேவாலயம் சென்றுவிட்டோம். மதியம் வந்து பார்த்தபோதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த என் சகோதரர் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலையைக்கூட இழந்துவிட்டார். அவரின் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஜீவனாம்சமாக ரூ.20 லட்சம் கேட்டிருந்தார். இந்த தற்கொலைக்கு காரணமான பிங்கியை கைது செய்ய வேண்டும். என் சகோதரரின் மரணத்துக்கு நீதி வேண்டும்" எனக் குறிப்பிட்டார். எஷய்யாவின் புகாரின் அடிப்படையில் பிங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை: 916 முத்திரை, போலி நகை - அடகு வைத்து மோசடி செய்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெட்டிபாளையம் சாலையில் உள்ள காந்திரபும் பகுதியை சேர்ந்த திவ்யா(31), செக்கடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி(38) ஆ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்களை காரில் விரட்டிய கும்பல்... பேசுபொருளான சம்பவம் குறித்து போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் மு... மேலும் பார்க்க

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் - சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, க... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் வழக்கு; `குற்றம் நிரூபிக்கப்படவில்லை'- மரண தண்டனை கைதியை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

மும்பையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி 23 வயது எஸ்தர் என்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஐதராபாத்திற்கு விடுமுறையில் சென்றுவிட்டு மும்பைக்கு ரயிலில் வந்தார். அவர் மும்பையில் டி.சி.எஸ் நிறுவனத்தில்... மேலும் பார்க்க

வனவிலங்கு வேட்டையில் இளைஞர் சுட்டுக் கொலை... யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகம்.. 13 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை 3- ம் டிவிஷன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜம்ஷித் என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை விசாரித்த வனத்துறையினர், ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இளம்பெண்ணிடம் நெருங்கிப் பழகிவிட்டு, திருமணத்துக்கு மறுப்பு - வங்கி ஊழியர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தன்ராஜ் (30) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே வ... மேலும் பார்க்க