கொலையா... தற்கொலையா? - கோவை மத்திய சிறை கைதி மரணத்தில் மர்மம்
கோவை மத்திய சிறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (33) என்பவர் திருப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்காக தண்டனை பெற்று கோவை சிறையில் இருந்தார்.
நேற்று காலை அவர் சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மாயமான அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
சிறைத்துறை அதிகாரிகள் அவரை தேடியபோது கழிப்பறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஏசுதாஸின் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது. அவர் கழிப்பறையில் மயங்கி கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதனிடையே அவரின் கழுத்தில் தசை சிதைந்து காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிறை வளாகத்தில் ஏசுதாஸ் பணியாற்றிய தொழிற்கூடம் மற்றும் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs