நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
கங்கையில் குளித்தால் வறுமை ஒழியாது: அமித் ஷாவுக்கு கார்கே பதில்
புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடிய நிலையில், கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான மிகப்பெரிய பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, பாஜக தலைவர்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு கங்கையில் நீராடி, புகைப்படக் கருவிகளுக்கு வேலை கொடுத்து வருகிறார்கள்.
எவர் ஒருவருடைய நம்பிக்கையும் சிதைக்க நான் விரும்பவில்லை. பாஜக - ஆர்எஸ்எஸ் என்ற பெயரில் இயங்கும் துரோகிகள் மற்றும், மதம் என்ற பெயரில் மக்களைத் துண்டாடும் அவர்களது செயல்களை காங்கிரஸ் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.