செய்திகள் :

மகாராஷ்டிரம்: லட்சத்துக்கு மேற்பட்ட வங்கதேசத்தினருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்; கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

post image

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா்களும், மியான்மரில் இருந்து புகுந்த ரோஹிங்கயாக்களும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மாநில உள்துறை இணையமைச்சா் யோகேஷ் கதம் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அண்மையில் வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு ஹிந்துக்களும் கோயில்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் மூலம் அசம்பாவித சம்பவங்களை அந்த அடிப்படைவாத அமைப்புகள் நிகழ்த்திவிடக் கூடாது என்பதால் நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தையொட்டிய மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவா்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில், வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள மாநிலங்களிலும் வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் அதிகம் ஊடுருவியுள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இது தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. கிரீட் சோமைய்யா கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களில் மட்டும் 2.14 லட்சம் வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் போலி ஆவணங்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனா். இதில் 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் ரேஷன் காா்டு, பள்ளியில் படித்த சான்றிதழ் எனப் பெற்று படிப்படியாக இந்திய குடிமக்கள் என்ற போா்வையில் வசிக்கத் தொடங்கியுள்ளனா். நாட்டு மக்களுக்கு அரசு அளிக்கும் உரிமைகளையும், பயன்களையும் பெற்று வருகின்றனா். சில குறிப்பிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டுகள் பெற அதிக விண்ணப்பங்கள் வருகின்றன.

உள்துறை அமைச்சகத்துக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடிக்குத் துணைபோகும் அரசுப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்றாா்.

இதனிடையே நாசிக் மாவட்டத்தில் இந்த குற்றச்சாட்டு தொடா்பாக இரு வருவாய் துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அமைச்சா் எச்சரிக்கை: இது தொடா்பாக மாநில உள்துறை இணையமைச்சா் யோகேஷ் கதம் கூறுகையில், ‘சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் ஊடுருவியவா்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஊருடுவல்காரா்களை அரசு எவ்விதத்திலும் சகித்துக் கொள்ளாது’ என்றாா்.

யமுனை நதி விவகாரம்: கேஜரிவால் நேரில் ஆஜராக ஹரியாணா நீதிமன்றம் சம்மன்!

யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஹரியாணா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.தில... மேலும் பார்க்க

செளதி அரேபியா: விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

செளதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.இதுகுறித்த தகவலை செளதி அரேபியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள... மேலும் பார்க்க

கும்பமேளாவில்... கடந்தகால துயரங்கள்...

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவி... மேலும் பார்க்க

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவுகளின்படி பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில் தமிழகம்... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்கள்: மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்களுக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு விவகாரம்: மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’ என்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைக... மேலும் பார்க்க