நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பாதாள் லோக் எழுத்தாளர்
பாதாள் லோக் சீரிஸின் திரைக்கதை ஆசிரியரான சுதிப் சர்மா திரைப்படங்களில் வன்முறையை புனிதப்படுத்துவதற்கு எதிராக பேசியிருக்கிறார். மேலும், அவரின் கருத்து அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை விமர்சிப்பதாக இருக்கிறது என்றும் பேசி வருகிறார்கள்.
OTT Play எனும் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சுதிப் சர்மா, 'ஒரே ஒரு நபர் ஹோட்டலுக்குள் நுழைந்து துப்பாக்கியால் 150 பேரை சுடுவது போல காட்சி வைக்கிறார்கள். அந்த இடத்தில் போலீஸ் எங்கே என யாருமே கேட்கவில்லையே. வன்முறை ஒரு கதையின் மையமாக இருக்கக் கூடாது. சமூக அவலங்களை சொல்வதற்கான கருவியாக மட்டுமே இருக்க வேண்டும்.
வன்முறையினால் ஏற்படும் பாதிப்புகளையும் சேர்த்தே சொல்ல வேண்டும். அப்படியில்லாமல் எந்தவொரு பொறுப்புணர்வும் இல்லாமல் வன்முறையை புனிதப்படுத்துவது சரியான செயல் அல்ல.' எனக் கூறியிருக்கிறார்.
சுதிப் சர்மா குறிப்பிட்டு பேசும் காட்சி 'அனிமல்' படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி. அதனால் சுதிப் சர்மா அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவைத்தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.