செய்திகள் :

Mysskin: ``மன்னிப்புக் கேட்டு உங்கள் எல்லோரையும் கடவுளாக்குகிறேன்.." - இயக்குநர் மிஷ்கின்

post image

'பாட்டல் ராதா' புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பிரயோகித்ததும் இளையராஜா முதலான சிறந்த இசையமைப்பாளர்களை ஒருமையில் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மிஷ்கின்

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், ``கவிஞர், எழுத்தாளர், பாடலாசியர், சிறந்தப் பெண்மணி தாமரையிடமும், தத்துவரீதியாக என்னை விமர்சித்த லெனின் பாரதியிடமும், நடிகர் அருள் தாஸ், சசி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தானு, என் மீது செருப்பை எறிய வேண்டும் எனப் பேசிய நண்பர், என்னால் பாதிக்கப்பட்ட அமீர், வெற்றிமாறன் என அனைவரிடமும் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நகைச்சுவைக் கூறப்படுகிறதென்றால், அதைக் கேட்பவர்கள் ஆழ்மனதிலிருந்துதான் சிரிப்பார்கள். அவர்கள் அந்த வார்த்தைகளைக் கவனிப்பதில்லை. அன்று அந்த மேடையில் அதுதான் நடந்தது. நகைச்சுவை என்று வரும்போது ஒருசில வார்த்தைகள் அப்படி வந்துவிட்டது. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால், ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும். என்னுடைய நகைச்சுவை என்பது வெறும் நகைச்சுவைதான். அதில் யாரையும் தனிப்பட்டமுறையில் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

DirectorMysskin

என் நேசத்துக்குறிய நடிகர் விஷாலுக்கும் எனக்கும் சண்டை நடந்தபோது, அன்று நான் கோபத்தில் இருந்தேன். அப்போதுகூட பொறுக்கி என்ற வார்த்தைதான் பயன்படுத்தினேனே தவிர வேறு மோசமான, வசை வார்த்தைகளைப் பேசவில்லை. மேடை நாகரீகம் வேண்டும் என்கிறார்கள். இது கூத்துக் கலைஞர்களின் மேடை. கிராமங்களில் இன்றும் இரவு மேடை நாடகங்களில் கேட்போர் வெட்கும் அளவிற்கான வார்த்தைகள் பேசுவார்கள். என் மனதுக்கு நெருக்கமானப் படம் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசையில், மக்களின் கவனத்தை ஈர்க்க பேசிய நகைச்சுவை அது.

திருக்குறளில் காமத்துப் பால் இல்லையா, சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை அல்குல் என வந்திருக்கிறது என்று பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற பெயரில் படம் வெளியானது. அந்தப் படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் பற்றி எதுவும் பேசவில்லை... அப்போது நீங்கள் அமைதியாகதானே இருந்தீர்கள்? கடந்த 3 நாள்களாக 500 பேர் போனில் அழைத்தார்கள். பெண்கள் அழைத்து பத்திரமாக இருங்கள் என்றார்கள். என்னப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் என் படத்தைப் பாருங்கள். அதில் என்னை புரிந்துக்கொள்ள முடியும்.

என் திரைப்பட வெற்றிக்குப் பிறகு கமல் சாரிடமும், ரஜினி சாரிடமும் கதைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நான் கதைக் கூறவில்லை. நான் நினைத்தால் எப்படியோ வென்றிருக்கலாம். பிசாசு 2-வில், என் தாய் நடிகை ஆண்டிரியாவின் நிர்வணக் காட்சி ஒன்று தேவைப்பட்டது. அதை எடுப்பதற்காக பெண் போட்டோ கிராபர் உட்பட, எல்லா ஏற்பாடுகளையும், செய்தேன். ஆனால், நான் பார்க்கும் இலக்கியக் கண்கொண்டு எல்லோரும் பார்க்கமாட்டார்கள். அவரின் நிர்வாணத்தை காண்பித்து நான் பெயர் வாங்கிவிடலாம். ஆனால் அந்தக் காட்சியே வேண்டாம் என முடிவு செய்தேன்.

2 வருடமாக அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. நான் சினிமாவை நேசிப்பவன். இதைத் தவிர எனக்கு வேறு வேலைகளே இல்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. அதற்கு மறுநாள்தான் வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் உரிமம் வாங்குவதற்கு ஒரு சேனல் என்னை அணுகியது. என் நெருக்கமான நண்பர் என்னை அங்கு அழைத்துச் சென்றார். 20 பேர் தடியர்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்துவைத்து, 70 லட்சத்துக்கு மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள்.

மிஷ்கின் - அருள்தாஸ்

அவர்கள் கண்முன்னே அந்த செக்கை கிழித்துப்போட்டு, நான் சென்னை வந்தபோது வெள்ளைப் பேப்பரும், பென்சிலுடன் வந்தேன். இதிலிருந்து மீண்டு வருவேன் எனக் கூறிவிட்டுவந்தேன். ஒவ்வொருமுறையும் துரோகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன். அதனால் மன்னிப்புக்கேட்க எப்போதும் தயங்கியதில்லை. உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு உங்கள் எல்லோரையும் கடவுளாக்குகிறேன்" என உருக்கமாகப் பேசினார்.

Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பாதாள் லோக் எழுத்தாளர்

பாதாள் லோக் சீரிஸின் திரைக்கதை ஆசிரியரான சுதிப் சர்மா திரைப்படங்களில் வன்முறையை புனிதப்படுத்துவதற்கு எதிராக பேசியிருக்கிறார். மேலும், அவரின் கருத்து அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை வ... மேலும் பார்க்க

Coldplay: லட்சத்தில் குவியும் ரசிகர்கள்; இந்தியாவில் மாஸ் காட்டும் இசைக் குழு! - யார் இவர்கள்?

தீவிர இசை ரசிகர்களுக்கு பரிட்சையமான இசைக் குழு Coldplay. இந்தக் குழு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் நிலையில், மும்பை, அகமதாபாத் என கன்சார்ட் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அகமதாபாத்தில் உள்ள ... மேலும் பார்க்க

விக்ரம் - அசின் நடித்த `மஜா' பட இயக்குநர் ஷஃபி உடல்நல குறைவால் மரணம்!

மலையாளத்தில் பல காமெடி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷஃபி நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார். இவர் தமிழில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன் ஆகியோர் நடித்த 'மஜா' படத்தை இயக்கியவர் ஆவார். இவருக்கு தற்போது... மேலும் பார்க்க

கல்ட் கிளாசிக் - கமல் Vs ரஜினி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`பவதாரணி கல்யாணத்துல, `சாதிச்சிட்டீங்க’ன்னு சொன்னார் ராஜா சார்..!' - சாதகப்பறவைகள் சங்கர் Exclusive

`தன்னோட கல்யாணத்துல, இவர் இசைக்குழுவோட கச்சேரிதான் வைக்கணும்னு பவதாரிணியே தன் அப்பா இளையராஜாகிட்ட சொன்னாங்களாம்.’`காலம் சென்ற பின்னணிப்பாடகர் ஷாகுல் அமீது மகளோட கல்யாணத்துக்கு இவர் இசைக்குழுவோட கச்சேர... மேலும் பார்க்க

What to watch on Theatre: குடும்பஸ்தன்,பாட்டல் ராதா, ஹவுஸ் கீப்பிங் - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

குடும்பஸ்தன் (தமிழ்)குடும்பஸ்தன் படத்தில்...நக்கலைட்ஸ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர், சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட... மேலும் பார்க்க