செய்திகள் :

சென்னை: கரை ஒதுங்கிய 1,000 பங்குனி ஆமைகள்; `மீன் வளம் குறையும் அபாயம்' - சூழலியலாளர்கள் கவலை!

post image

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இனமான ரிட்லி ஆமைகள் மொத்தமாக உயிரிழப்பது சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பங்குனி ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆமைகளின் இருப்பு கடல் சூழலியலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பங்குனி ஆமைகளின் முக்கியத்துவமும் சூழலியலாளர்கள் கவலையும்...

மீன்களின் இனப்பெருக்க காலத்தில் பெருமளவிலான மீன் குஞ்சுகளை ஜெல்லி மீன்கள் தின்றுவிடும் அபாயம் உண்டு. பங்குனி ஆமைகள் ஜெல்லி மீன்களையும் பவளப்பாறையில் உள்ள பாசிகளையும் உண்பதனால் இவை ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்து பிற மீன்களின் பெருக்கத்துக்கு உதவுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் கடலில் 7,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பங்குனி ஆமைகள் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு கடற்கரைகளை வந்தடையும். இந்த ஆமைகளை பாதுகாக்க என்.ஜி.ஓக்களும் தமிழ்நாடு அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பங்குனி ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து, பாதுகாப்பாக அடைகாத்து, முட்டை பொறித்தவுடன் அவற்றில் கடலில் விடும் நடவடிக்கைகள் ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் ஆயிரம் முட்டைகளில் ஒன்றிரண்டு ஆமைகள்தான் வளர்ந்து முதிர்வடைகின்றன.

Olive ridley turtles

இப்படி கொத்து கொத்தாக ஆமைகள் உயிரிழப்பது இதற்கு முன்னர் நடந்திடாத ஒன்று. கடலில் இறந்த ஆமைகள் அனைத்தும் கரை ஒதுங்கியிருக்கும் என சொல்ல முடியாது என கவலைத் தெரிவிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். கிட்டத்தட்ட 5,000 ஆமைகள் வரை இறந்திருக்கலாம் என்கின்றனர்.

நீரில் மூழ்கி இறந்த ஆமைகள்

இறந்த ஆமைகளின் உடற்பகுப்பாய்வு முடிவுகள், இந்த ஆமைகள் பெரும்பாலும் மூழ்கியே உயிரிழந்ததாகத் தெரிவிக்கின்றன.

ஆலின் ரிட்லே அல்லது பங்குனி ஆமைகள் நீருக்குள் 45 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்கக்கூடியவை. எனினும் மூழ்கி இறந்ததற்கு நெறிமுறைகளை பின்பற்றாமல் மீன்பிடிக்கும் மீனவர்கள்தான் காரணம் என சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரையிலிருந்து 8 கிலோமீட்டர் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டிய இழுவைப் படகுகள், 2, 3 கிலோமீட்ட தூரத்திலேயே இழுவை வலை மற்றும் செவுள் வலைகளைப் பயன்படுத்துவதனால் அதில் சிக்கும் ஆமைகள் நீண்ட நேரம் நீருக்குள் இருந்து மூச்சு விட முடியாமல் இறக்கின்றன எனக் கூறப்படுகிறது.

"அடுத்த இரண்டு மாதகாலம் பங்குனி ஆமைகள் அதிக அளவில் முட்டையிட வரக்கூடும் என்பதனால் தமிழ்நாடு மீன்வளத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்! | Album

இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி... மேலும் பார்க்க

முதுமலை: பீர் பாட்டிலை வாயில் வைத்து விளையாடும் குட்டி யானை - கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்

அடர்ந்த வனத்தையும் அரிய வகை உயிரினங்களையும் கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கி வரும் முதுமலை காப்பகத்திற்கு நட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: முதன்முதலாக 'மலைச்சிட்டான்' வருகை - அண்ணாமலையார் மலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

மலைச்சிட்டான் பறவைகளில் உலகம் முழுவதும் பல வகைகள் இருக்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் indian black bird எனப்படும் ஒருவகை பறவைக் காணப்படுகிறது.இது ஒரு சிறிய நிலவா... மேலும் பார்க்க

கோத்தகிரி: குடிநீர்த் தொட்டிக்குள் தத்தளித்த கரடிகள்; சாதுரியமாக யோசித்து, ஈஸியா மீட்ட வனத்துறை!

நீலகிரியில் வாழிடச் சூழலை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் உணவு தேடிக் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. பொது இடங்களில் கொட்டப்படும் காய்கறி, பழக் கழிவுகளால் ஈர்க்கப்படும்... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய பெண் புலி, மீண்டும் வனத்திற்குள் விடுவிப்பதில் சிக்கல் - என்ன நடந்தது?

கேரள மாநிலம் வயநாடு, புல் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாள்களாக நடமாடி வந்த புலி ஒன்று கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்தது.மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அச்சத்தில் அந்த புலி... மேலும் பார்க்க