ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த ...
முதுமலை: பீர் பாட்டிலை வாயில் வைத்து விளையாடும் குட்டி யானை - கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்
அடர்ந்த வனத்தையும் அரிய வகை உயிரினங்களையும் கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கி வரும் முதுமலை காப்பகத்திற்கு நடுவே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருப்பது துரதிஷ்டவசமாக ஒன்றாவே பார்க்கப்படுகிறது. மூன்று மாநிலங்களை இணைக்கும் இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கட்டிருந்தாலும் பகலில் சுற்றுலா மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
இந்த சாலையில் வாகனங்களை வாகனங்களை நிறுத்த, சாலையோர வனத்திற்குள் நடமாட, குப்பைகளை வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற அத்துமீறல்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் சாலையோரத்தில் குடும்பத்துடன் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை குட்டி ஒன்று அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து விளையாடிய அவலம் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பேசும் இயற்கை ஆர்வலர்கள், " வனப்பகுதிக்குள் வீசப்படும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் வனவிலங்குகளின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக யானைகளின் அடி பாதங்களை துளைக்கும் மது பாட்டில்கள் அவற்றின் உயிருக்கே எமனாக மாறி வருகிறது. யானைகள் கூட்டமாக நடமாடும் பகுதியில் மது பாட்டில்கள் சர்வசாதாரணமாக கிடப்பது, வனத்தை நாம் பாதுக்காக்கும் அலட்சியத்தின் குறியீடாக இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. கடுமையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் " என்றனர்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், " யானை குட்டி ஒன்று பீர் பாட்டிலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை பார்த்து எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தீ தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் வனப்பகுதிகளில் வீசப்படும் குப்பைகளை தொடர்ந்து அகற்றி வருகிறோம். குப்பைகள் வீசுபவர்களை கண்காணித்து அபராதம் விதித்து வருகிறோம் . ஆனால், அதையும் மீறி இந்த செயல் நடந்திருக்கிறது. இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs