புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் நிதீஷ் குமார்!
மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது.
மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. தற்போது மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்எல்ஏ அப்துல் நசீர் மட்டுமே உள்ளார். அவர் இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் என்று நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையுடன்(37 எம்எல்ஏக்கள்) உள்ளது. ஒரு எம்எல்ஏவுக்கான ஆதரவு மட்டும் திரும்பப் பெறுவதால் பாஜக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு 6 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.