சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
தை அமாவாசை: மகா கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரயில்கள்!
தை அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் பிரயாக்ராஜில் உள்ள ஒன்பது நிலையங்களிலிருந்தும் திசை வாரியாக இயக்கப்படும், இது மகா கும்பத்திற்குப் பக்தர்களின் சுமூகமான பயணத்தை உறுதி செய்யும்.
சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளையும் செயல்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டத்தின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மால்வியா கூறுகையில்,
ஜனவரி 29 ஆம் தேதி தை அமாவாசையன்று 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், அவற்றில் பெரும்பாலானவை பிரயாக்ராஜ் சந்திப்பிலிருந்து இயக்கப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களுடன், கோட்டத்தில் உள்ள மற்ற நிலையங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கடந்த 2019ல் தை அமாவாசையின்போது இயக்கப்பட்ட 85 ரயில்களை விஞ்சி, இந்த கும்பத்தின்போது ஒரே நாளில் 150 சிறப்பு ரயில்களை இயக்குவது ஒரு முக்கிய சாதனையாகும்.
இந்தத் திட்டங்களின் மூலம், பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டம், தை அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகா கும்பத்தில் தை அமாவாசையின் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு வரும் பக்தர்களின் சாதனை எண்ணிக்கையை நிர்வகிக்க பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டம் முழுமையாகத் தயாராக உள்ளது.
மகர சங்கராந்தி அன்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை நிர்வகிக்க 101 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வரவிருக்கும் தை அமாவாசை இந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
தை அமாவாசை அன்று 10 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள் என்றும், அவர்களில் 10-20 சதவீதம் பேர் ரயிலில் பயணம் செய்வார்கள் என்றும் மேளா ஆணையம் எதிர்பார்க்கிறது.