சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசத்திய இளம் 'Equestrian' சாம்பியன்ஸ் |Photo Album
அனுபமாவின் பரதா டீசர் வெளியீடு!
தெலுங்கு படம் சினிமா பன்டி மூலம் பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இரண்டு பெண்களுடன் பயணிக்கும் கிராமத்தியப் பெண்ணின் சாகசப் பயணத்தோடு கதை நகர்வதுபோல் உள்ளது.
கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது. பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.
பாக்யலட்சுமி போசா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இசையமைப்பில் கோபி சுந்தரும், மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவாளரும் பணியாற்றியுள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க:2கே லவ் ஸ்டோரி டிரைலர்!