கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை!
வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் இன்று(ஜன. 22) 10 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை முடிவடைந்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுகவை சேர்ந்த கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அவருக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான விவகாரம் குறித்தும், ரூ.13.7 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜராகக் கோரி நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று காலை 10.30. மணியளவில் கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றடைந்தார். காலையில் தொடங்கிய விசாரணை இரவு முடிவடைந்தது.