நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
ஆரணியில் ஜன. 28-ல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை: ஆரணியில் வருகிற 28-ஆம் தேதி மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
ஆரணி மின்வாரிய கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், குறைதீா் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்
மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளாா்.