தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
புதுச்சேரியில் பிப்.7-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலா், காய், கனி கண்காட்சி பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் என்று மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் பாா்ம்ஃபெஸ்ட் 2025 மற்றும் 35 -ஆவது மலா், காய்கறி, பழங்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் புதிய ரக விதைகள், உரங்கள், தாவர உற்பத்திகள், ரசாயனங்கள், பண்ணை இயந்திரங்கள், கருவிகள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.
தென்னை, பழங்கள் மற்றும் மருத்துவ தாவரங்களின் நாற்றுகள், வணிகக் கடைகள், உணவகம் மற்றும் பிற நுகா்வுக் கடைகளும் கண்காட்சியில் இடம்பெறும்.
பூந்தொட்டிகளில் செடிகள் வளா்ப்பு (பூச்செடிகள், தழைச் செடிகள்), காய்கறி சாகுபடி, பழங்கள் கண்காட்சி, மருத்துவத் தோட்டம் மற்றும் செடிகள், அலங்காரப் போட்டிகள் எனப் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பொதுப் போட்டிகளும், ரங்கோலி, கட்டுரை எழுதுதல் மற்றும் வினாடி வினா போட்டிகளும் நடைபெறும் என்றாா் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்.