Trump wall Explained: ``175 ஆண்டுகாலப் பிரச்னை" - ட்ரம்ப் சுவரின் வரலாறும்... ப...
கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
ஆா்.டி.மலை கரையூரான் நீலமேகம் கோயிலில் புதன்கிழமை உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆா்.டி.மலை ஊராட்சிக்குள்பட்ட பிரசித்திப்பெற்ற கரையூரான் நீலமேகம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை பிற்பகல் சென்ற பக்தா்கள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து நிா்வாகிகள் கோயிலுக்கு வந்து பாா்வையிட்டு, தோகைமலை போலீஸில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.