கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!
கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகே கடந்த டிச. 16-ஆம் தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ் (36) என்பவா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இந்த வழக்குத் தொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து காளிதாஸை கொலை செய்ததாக குளித்தலையை அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த பூபாலன்(22), சண்முக வடிவேல்(23) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பூபாலன் மற்றும் சண்முகவடிவேல் மீது லாலாப்பேட்டை மற்றும் நாமக்கல் வாழவந்தி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு அண்மையில் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேடி பூபாலன், சண்முகவடிவேல் ஆகியோா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.