மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது, ``முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், மக்களில் ரூ. 12 லட்சம் சம்பளம் பெறுபவராய் இருந்தால், சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு (ரூ. 3 லட்சம்) வரிக்கு சென்றிருக்கும். இந்திரா காந்தியின் ஆட்சி இருந்திருந்தால், ரூ. 12 லட்சத்தில் ரூ. 10 லட்சம் வரியாக சென்றிருக்கும்.
10 முதல் 12 ஆண்டுகளுக்குமுன்பு, காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளம் இருந்திருந்தால், ரூ. 2,60,000 வரியாக இருந்திருக்கும். ஆனால், பாஜக அரசின் 2025 - 26 பட்ஜெட்டுக்குப் பிறகு, ரூ. 12 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்த வேண்டியதில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!
1970-ல் காங்கிரஸ் ஆட்சியில் நேரடி வரி விகிதம் 93.5 சதவிகிதத்தை எட்டியது; 1973 - 74-ல் 97.5 சதவிகிதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின்படி, புதிய வருமான வரி முறையில் தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், ரூ. 12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.