செய்திகள் :

பாஜக ஆட்சியில் பட்டியலினத்தவர் கூக்குரல்களைக் கேட்க யாருமில்லை: பிரியங்கா காந்தி

post image

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண்ணின் படுகொலை சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி. பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ``அயோத்தியில் பகவத் கதையைக் கேட்கச் சென்ற ஒரு பட்டியலினப் பெண்ணிக்கு இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் போன்ற கொடூரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அவமானப்படுத்துகின்றன.

கடந்த மூன்று நாள்களாக பெண் காணாமல் போயிருந்தாள், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாஜகவின் ஆட்சியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் கூக்குரல்களைக் கேட்க யாரும் இல்லை. பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்களுக்கு இணையாக உத்தரப் பிரதேச அரசு மாறிவிட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பொறுப்பான காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சமாஜவாதி எம்.பி. அவதேஷ் பிரசாத், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், மக்களவை பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண் ஒருவர், ஜனவரி 30ஆம் தேதி இரவு பகவத் கதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபின், வீடு திரும்பவில்லை என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் ஜனவரி 31 ஆம் தேதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு, காணாமல் போயிருந்த பெண் உடல் முழுவதும் காயங்களுடன், கால்கள் கட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக ஒரு வயலில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ``பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் கொலை சம்பவம் நிகழவில்லை. பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தற்போது வரை மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விரைவில் முறியடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும்’’ என்று காவல்துறை அதிகாரி கூறினார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ துறையில் தடம் பதிக்கும் இந்தியா?

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாட்டில் இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில... மேலும் பார்க்க

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க