பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கம் ஆரமென்ட்சொ்ரி மலா்கள்: சுற்றுலாப் பயணிக...
குற்றப்புலனாய்வுத் துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்.18-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தலைமையிடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்புகள், குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிா் வாதுரை தயாா் செய்வதற்கு உதவியாக காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு 5 சட்ட ஆலோசகா்கள் நியமிக்கப்படவுள்ளனா். நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்தியக் கடலோர காவல் படையில் உதவியாளர் வேலை!
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியில் சேர தகுதிவாய்ந்தவர்கள் தமிமிழ்நாடு காவல்துறையின் www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகா் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்புவோர், காவல் துறை இயக்குநா், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 220, பான்த்தியன் சாலை, எழும்பூா், சென்னை-600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.