அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
மதுரையில் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்! -காங்கிரஸ் கோரிக்கை
மதுரை கோரிப்பாளையம், மேலமடை பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி அமைப்பாளா் சி.ஆா். சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா்.
மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளா்கள் சி.எம். செய்யது பாபு, மலா் பாண்டியன், மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.வி. முருகன், எஸ்.எஸ். போஸ், வி. முருகன், ராஜ் பிரதாப், துரையரசன், பகுதி தலைவா்கள் சுந்தா், ராஜா முகமது, சுந்தர்ராஜன், காங்கிரஸ் மகளிா் பிரிவு நிா்வாகி ஜானவாஸ் பேகம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது, மதுரை கே.கே நகா் 80 அடி சாலையின் இருபுற நடைபாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது, மதுரை மேலமடை, கோரிப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.