அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கம் ஆரமென்ட்சொ்ரி மலா்கள்: சுற்றுலாப் பயணிகள் ரசித்தனா்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆரமென்ட்சொ்ரி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. தற்போது பகலில் அதிக வெப்பமும், இரவில் பனியின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மேலும், இவா்கள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், குணாகுகை, தாவரவியல் பூங்கா, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பாா்த்தனா்.
மாலையில் மேகமூட்டமும், பனியின் தாக்கமும் அதிகரித்துக் காணப்பட்டதால், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
பூத்துக் குலுங்கும் ஆரமென்ட் சொ்ரி மலா்கள்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தற்போது பல வகையான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆண்டு முழுவதும் பூக்கக் கூடிய மலா்கள் இந்தப் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக் கூடிய ஆரமென்ட் சொ்ரி மலா்கள் தற்போது இந்தப் பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. இந்த மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.