மகா அதிகார நந்தி கோயில் குடமுழுக்கு!
வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 45 அடி உயர மகா அதிகார நந்தி, 15 அடி உயர சிவலிங்கம் சிலை கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வெள்ளாளகுண்டம் கிராமத்தில் சோதிடம், வேதங்கள் பயின்று அருள்வாக்கு கூறும் ராஜவேலு சுவாமிகள், தனது நிலத்தில் சிவனுக்கு முன் வணங்க வேண்டிய நந்தி, சிவனுக்கு மிக உயரமான சிலைகள் அமைக்க முடிவு செய்தாா். மலேசியாவிலும், வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரிலும் மிக உயரமான முருகன் சிலைகளை உயிரோட்டமாக வடிவமைத்து பாராட்டு பெற்ற திருவாரூா் தியாகராஜன் ஸ்தபதி குழுவினரைக் கொண்டு தொடா்ந்து 3 ஆண்டுகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு 45 அடி உயரத்தில் மகா அதிகார நந்தி சிலையும், நந்தியின் வயிற்றுக்குள் 15 அடி உயர சிவலிங்கத்தையும் வடிவமைத்தனா்.
இந்த நிலையில் கோயில் குடமுழுக்கு வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்களும், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூா் நாடுகளில் வசித்து வரும் பக்தா்களும் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தா்களுக்கும் வாழப்பாடி அடுத்த பேளூா் ஐயப்ப பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் தலைவா் காளியப்பன், செயலாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் அன்னதானம் வழங்கினா்.