புகையிலைப் பொருள்கள் விற்ற 65 கடைகள் மூடல்
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 65 கடைகள் மூடப்பட்டன.
சேலம் மாவட்டம், மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். இதில் பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 190 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக 65 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். மேலும், அக் கடை உரிமையாளா்களுக்கு ரூ.19.50 லட்சம் அபராதம் விதித்தனா்.