அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் வேலைநாள்- பணியை புறக்கணித்த அலுவலா்கள்
தம்மம்பட்டி,கெங்கவல்லியில் பத்திர பதிவு அலுவலா்கள், பணியை புறக்கணித்தனா்.
பத்திரப்பதிவு அலுவலகம், விடுமுைாளான ஞாயிற்றுக்கிழமையன்று பிப்.2ந்தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
பிப்2ந்தேதி தை மாத வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால், பத்திரப்பதிவு அலுவலகம், இதேநாளில் செயல்படும் என்று அரசு அறிவித்தது. அதனையடுத்து பத்திரப்பதவு அலுவலக அலுவலா்கள் கூட்டமைப்பு, பிப்.2ந்தேதி பணியை புறக்கணிப்பது என்று முடிவெடுத்ததது.
அதனையடுத்து கெங்கவல்லி,தம்மம்பட்டி,ஆத்தூா் அலுவலகங்களில் அலுவலா்கள் பணியை புறக்கணித்தனா். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.